Thursday, June 27, 2019

எதை நோக்கிய பயணம்

எதை நோக்கிய பயணம்

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் தன் அதிகபட்ச சாதனையாக கருதுவது

 பண்டிகை காலங்கள், திருமண நிகழ்வுகள் அல்லது விருந்து நிகழ்ச்சிகள்,சுற்றுலா செல்லுதல் இது போன்றவைகளுக்கு ஒரே மாதிரியான ஆடையணிந்து புகைப்படமெடுத்து பகிர்வதும் பெரும்பாலும் சாப்பாடு நிகழ்வுகளுக்கே இரவென்றாலும் பகலென்றாலும் படையெடுத்துச் செல்வது மட்டும்தான் என்றவகையில் இருக்கும் அவர்களின் நகர்வு
மிகவும் வேதனைக்குறிய விசயமாக உள்ளது.

ஊரில் இருக்கும் இளைஞர்கள் தான் வெளி அனுபவம் என்னவென்று தெரியவில்லை
செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்

 வெளிநாடுகளில் வந்து கஷ்டபட்டு
 விடுமுறையில் போகின்றவர்களும் அவர்களோடு சேர்ந்து ஊக்குவிக்கும் விதமாக சுற்றுவது அதைவிட கொடுமை.


படிக்காத ஒவ்வொரு தகப்பனும்
தன்னை போல தன் பிள்ளைகளின் வாழ்க்கையும் துயரங்களிலேயே தோய்ந்து விடக்கூடாதென

நல்ல படிப்பு படித்து
சிறப்பான நிலைக்கு தங்கள் பிள்ளைகள் வரவேண்டுமென நினைத்து அவர்கள் தரும் விலைகள் கொஞ்சநஞ்சமல்ல

ஆனாலும்
எதிர்கால சிந்தனைகள் எதுபற்றியும் கவலைகொள்ளாமல்
நமது நிலை என்னவென்று கூட
அறிந்து கொள்ளாமல்
ஒரு பைக்கும் மொபைலும் மட்டும்
உலகமென கருதும் இந்த நிலை வருத்தமான விசயம்.

பொதுநல நோக்கங்களோடு நடத்தப்படும் கல்வி மற்றும் மதரஸா நிகழ்வுகள் ஊர் நன்மைகளுக்காக நடத்தப்படும்
திட்டங்கள் இவை எவற்றுக்கும்

யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள்

வயசு பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்
ஆனாலும் நாட்டின் சூழலும்
நம் நிலையும், பொது நல சிந்தனையும், அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.

நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு பலனளிக்கவில்லையென்றால்

பொதி சுமக்கும் கழுதையும்
நீங்களும் ஒன்றுதான்

ஆகவே உங்கள் பெற்றோர்களின் கனவுகளுக்கு உருவம் தாருங்கள்
அவர்களின் உழைப்புக்கும்
தியாகத்திற்கும் நீங்கள்
செய்யும் கைமாறு அதுவாகத்தான் இருக்கும்.

உங்கள் இளமை காலங்களை வெற்று சந்தோசங்களுக்கு மட்டும் பயன் படுத்திக்கொள்ளாமல்
வெளிச்சமான பாதையை நோக்கியும் கொஞ்சம் செல்ல முயலுங்கள்

கவரிமான்களுக்கு
ஒரு சொல் போதும்
கழிசடைகளுக்கு
பட்டால்தான் புரியும்!!.....

No comments: