படத்தில் நீங்கள் பார்ப்பவர் ஒரு அமெரிக்க முஸ்லிம் பெண். அவர் பெயர் தாஹிரா அஹமது. இவர் அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Associate chaplain ஆக பணியிலிருக்கிறார். அமெரிக்கா மட்டுமன்றி ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்படும் இனக் கலவரங்களின் போது இருதரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார். இவரின் மனித நேயம் மிக்க சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்தளித்து "அமெரிக்காவின் மிகச் சிறந்த பெண்களில் ஒருவர்" என்று பெருமைபடுத்தியிருக்கிறார்.
சரி, இப்ப என்ன அதுக்கு???? அதானே.....
இவர் கடந்த மே மாதம் 29ம் தேதி,பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தணிக்கும் பொருட்டு பேச்சுவாத்தைக்காக வாஷிங்டன் நகருக்குப் புறப்படுகிறார்.
வழக்கமாக இவர் பயணிக்கும் United Airlinesல் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வேளையில், சிப்பந்தி இவரிடம் என்ன குடிக்கிறீர்கள்? என்று கேட்க, தனக்கு ஒரு இனிப்பில்லாத சோடா (Diet Coke ) கேட்டிருக்கிறார். சிறுது நேரத்தில் திறக்கப்பட்ட கேன் ஒன்றை சிப்பந்தி தர, சுகாதாரம் காரணாமாக திறந்திருப்பதை இவர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் Unopened can வேண்டுமென்று கேட்க, திறக்காத CAN களை பயணிகளுக்குத் தர எங்களுக்கு அதிகாரம் கிடையாது. ஏனெனில் இதை ஒரு ஆயுதமாகப் படுத்த பயணிகள் முற்படலாம். என்று காரணம் கூறியிருக்கிறார்.
"நான் உங்கள் விமானத்தில் அடிக்கடி பயணிக்கக் கூடியவள். இதுவரை யாரும் இதுபோல சொன்னதில்லை" என்று சொல்லியும் சிப்பந்தி மறுக்கவே, சரியென தாஹிரா ஏற்றுக்கொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில் இவரின் பக்கத்தில் இருக்கும் பயணி 'பீர்' வேண்டுமென்று கேட்க, திறக்காத CAN BEER கொடுத்தவுடன், தாஹிரா அந்தச் சிப்பந்தியிடம், "இப்ப இது ஆயுதமாகப் பயன்படாதா?" என்று கேட்க வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
சக பயணியிடம், " நீங்கள் இதற்கு சாட்சியாக இருங்கள். இந்த பாரபட்சமான கொடுமையான நடத்தையினைப் பற்றி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்" என்று தாஹிரா சொன்ன மாத்திரத்தில் அந்தப் பயணியும் இவரை இன ரீதியாக அருவருப்பான சொற்களால் தாக்கியிருக்கிறார்.
வேறு ஏதும் பேசமுடியாத இந்த சூழலில் தாஹிரா அழுக, வேறு சிலர் தேற்ற... உடனே விமானத்திலிருந்தபடியே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நிகழ்வினை அப்டேட் செய்கிறார். இவர் தரையிறங்குவதற்கு முன்பாகவே விசயம் பரவ, தற்போது ஏர்லைன் நிர்வாகம் இவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இவரின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளங்களை முடக்க பல முயற்சி நடந்துள்ளது.
இவருக்கு ஆதரவாக #UnitedForTahera என்ற ஹாஷ்டாக் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. மேலும் United Airlines ஐ பயன்படுத்த மாட்டோம் என்று அதன் APPs ஐ நீக்குவது போன்ற Screen shots ம் அதிகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- Rafeeq Friend
No comments:
Post a Comment