Sunday, November 18, 2012

மனைவி சொல் கேட்டு மானமும் போச்சு வாழ்வும் போச்சு !

தெரு ஓரம் அழகிய வாகனம்
ஓடிப்போய் ஓர் அலசல் பார்வை
உறவினர் ஓசைக் கேட்டு உறங்க
மென்மையான ஒலி எழுப்ப
விழித்துப் பார்த்து வாழ்த்து சொன்னார்

வாங்க வாங்க வீடு வரை வாங்க
வார்த்தை மதித்து வந்தார்
கட்டிய வீட்டை காட்டி விளக்கம் கொடுத்தேன்
படுக்கை அறை அதில் குளியல் அறை
 பெரிய கூ டம் சின்ன கூ டம்
அடுப்பங்கறை அதில் பொருட்கள் வைக்க இணைப்பு அறை
மகளுக்கு, மகன்களுக்கு தனித் தனி அறை
வீடனைத்தும் சலவைக் கல் பதிப்பு
பார்த்தார்! அங்கும் இங்கும் பார்த்தார்
தொழ வேண்டும் தொழ அறை உண்டா! என வினவினார்
'பெரிய அறையில் தொழலாம்' என்றேன்
'வேண்டாம் !  அருகில் பள்ளி அங்கு தொழ செல்கிறேன்' என்றார்

புறப்பட்டு முன் ' உங்களிடம் ஓர் உதவி'
'சொல்லுங்கள் நேரம் ஆனது '

வயதிற்கு வந்த மகள்களுக்கும் மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினேன்
வாழ்கைப் பட்டவள் நல்ல வீடு இருப்பின்  நல்ல வரம் கிடைக்குமென்றாள்
வசதியாக வீடு கட்டியதில் சிறிய கடன்
கட்டிய வீட்டைப் பார்த்து செலவந்தர்கள் ஓடிவர
மக்களுக்கு சிறப்பாக திருமணம் முடித்ததில் பெரிய கடன்




பழமில்லா மரத்தில் பறவைகள் தங்காது
பழமுள்ள மரத்தை  நாடிச் சென்றது போல்
பிள்ளைகள் அனைவரும் கட்டிய இடம் பெயர நாங்கள் தனிமை
கடன்கள் அடையாமல் கொடுத்தவர் நெருக்க
கடனை அடைக்க மனைவி  கடல் கடக்க சொல்கின்றாள்
வலுவில்லை பணமில்லை பயணம் போய் வர
பணம் கொடுத்து உதவினால் பயணம்   சென்று
நீங்கள் கொடுக்கும் பணத்தை திருப்பித் தருவேன் என்றேன்
'பார்ப்போம்' என்று போனவரை பார்க்க முடியவில்லை
வேதனை தாங்க முடியாமல் வெதும்புகின்றேன்
மனைவி சொல் கேட்டு மானமும் போச்சு வாழ்வும் போச்சு


No comments: