Friday, November 13, 2009

மழை இன்று இடமிருந்து வலமாகப் பெய்தது

மேலிருந்து
கீ
ழா
க
அல்ல
மழை இன்று
இடமிருந்து வலமாகத்தான் பெய்தது
ஆம்
என்னை அவள் இன்றுதான்
முதன்முதலாய்
பொன்மழை விழிகளால் நனைத்தாள்

அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

No comments: