Sunday, October 18, 2009

தமிழருக்கு நொபெல் பரிசு

வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் சிதம்பரத்தில் பிறந்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெறுகிறார்
தமிழகத்தின் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தோமஸ் ஸ்டிட்ஸ் மற்றும் அடா யொனாத் ஆகியோர் இவ்வருடத்துக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இவர்களில் ராமகிருஷ்ணன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரென்றாலும் இந்தியப் பூர்வீகம் கொண்டவர். ஏனைய இருவரில் ஒருவர் அமெரிக்கர், அடுத்தவர் இஸ்ரேலியர்.
டி.என்.ஏ.யின் தகவல்களை உடற்பாகங்களின் குணாதிசயங்களாக மாற்றம் செய்யும் ரைபோசோம்களின் கட்டமைப்பை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இவர்களது இந்த கண்டுபிடிப்பு புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை தயாரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக் குழு கூறுகின்றது. 
source: BBCTamil.com

No comments: