நண்பன் என்றால் மனம் விட்டு பேசுவது இயல்புதானே. என் நண்பன் அவசரமாக என்னை நாடி வந்து தன் மனதில் கொண்டிருக்கும் ஆசையினை சொல்ல வந்தான். 'நான் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள நாடியுள்ளேன்
உனக்கு தெறித்த பெண் இருந்தால் சொல்' என்றான்.
நான் அதிர்சியடைத்து 'என்ன
விளையாடுகிறாயா? அருமையான, அழகான குணமான செல்வந்தர் வீட்டுப் பெண்ணை
மனைவியாக பெற்றுள்ள உனக்கு ஏன் இந்த தவறான எண்ணம் வந்தது' என வியப்புடன்
கேட்டேன்.
அதற்கு அவன் சொன்ன பதில் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும்
இருந்தது! அவன் சொன்னது ' "என் மனைவி அனைத்து வகையிலும் உயர்ந்தவள் தான்..நான் அவளை
மிகவும் நேசிக்கின்றேன் ஆனால் அவள் எப்பொழுதும் என்னிடம் வீண் சண்டையிட்டு
என் மனைதை நோகச் செய்து எனக்கு மன அமைதி இல்லாமல் ஆக்கி விடுகின்றாள்.
அதற்கு மாற்று வழி எனக்கு தோன்றியது. நான் இன்னொரு திருமணம் செய்துக்
கொண்டால் அவளது சண்டை அந்த இன்னொரு மனைவியுடன் திரும்பிவிட நான் அமைதியாக இருப்பேனல்லவா !" என்றான்!
அவனுக்கு நான் சொன்ன பதில் இதுதான்.
"ஓர்
இறை நம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம்.
அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு
பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்:
முஸ்லிம்.
"உங்களில் சிறந்தவர்கள் தங்கள்
மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.
அவனுக்கு அறிவுரை கூறிய பின்பு வீட்டுக்கு சென்று என் மனைவியின் ஊடலுடன் ஒரு செய்தியை சொன்னேன்.
'இரண்டாம் திருமணம் பற்றி ஒரு பெரியவர்
பேசுவதனைக் கேட்க நேர்ந்தது. 'ஆண்களில் பலருக்கு அந்த எண்ணம்
இருந்தாலும் மனைவிக்கு பயந்து அதனை
செய்வதில்லை மற்றும் ஒரு மனைவியை வைத்து குடும்பம் நடத்துவதே பெரிய சிரமமாக
இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் பற்றி நாம் எப்படி இந்த கால
கட்டத்தில் யோசிக்க முடியும் எனக் கூறினார்'.
ஆகா! நல்ல செய்தி கிடைத்து விட்டது என்ற ஆர்வத்துடன் அந்த பெரியவர் சொன்ன
இரண்டாம் திருமணம் பற்றி எனது மனைவியிடம் சொன்னேன். அவள் சொன்ன ஒரே பதில் '
இத்தனை நாட்கள் அவர் செய்த பல நல்ல பிரசங்கங்களைப் பற்றி சொல்லாமல் இதனைப்
பற்றி மட்டும் ஏன் சொல்கின்றீர்கள்' என வினவினாள். நான் வாய் அடைத்துப்
போய் அமைதியானேன்.
Saturday, February 4, 2012
Thursday, February 2, 2012
காதல் சிறகினிலே
இருபதில் தொடங்கிய
இதிகாசக்காதல்
அருபது முடிந்தும்
அறுவடையற்று
நிறைந்த கோபங்கள்
நிகழந்த சண்டைகள்
உதிர்ந்து உதிர்த்து
வெற்றுச்செதில்களாய்
விழுதுகளில் விளையாடி
தொடங்கிய காதல்
வேர்களில் நிறைந்தது
நிம்மதியாய்
வெளுத்த மீசைக்கு
கருமை அடிக்க
பெண்மையின் கண்களில்
என்றும் வெளுக்காத
காதல் கண் மை
காதல் தொடங்கிய
கண்கள் சுருங்கலாம்
வாய்கள் மொழிந்த
வார்த்தை மறக்கலாம்
காமம் சுகந்த
தேகம் இளைக்கலாம்
தேடிடும் கைகளுள்
பற்றிடும் உயிரென
தளர்ந்த கைகள்
இருக்கிப்பிடிக்கையில்
குழைந்த கதல்
இறுதியாய்..
இனிமையாய்..
என்றும் இளமையாய்..
Source : http://uumm.wordpress.com/
உமா
உமா. கோவை வாசி. கவிதைகள் ஒவ்வொரு அசைவையும் தாமே தேர்ந்தெடுக்க முடிகிற அழகிய வண்ணக் கனவு. அந்தக் கனவுகள் தருகிற புத்துணர்வே ஒவ்வொரு சுவாசத்தையும் இயல்பாக்குகிறது. உமாவின் கனவுகளின் ஆல்பத்தை பகிர்ந்து கொள்ள நட்போடு வரவேற்கிறேன்...உமாவும் கவிதையும்இயற்கையின் அடிமை
இதயங்களின் சிநேகிதி....
எதையும்..எவரையும்..
அவரவர்..குறை ..நிறைகளுடன்..
நேசிக்க விரும்புவபர்....
கவிதைகளோ...கதைகளோ...
வாழ்கையை..மனித உணர்வுகளை...
ரசித்து...ருசித்து...பார்க்கும்
அன்பால் மட்டுமே..அனைத்தையும்
சாதிக்கத்துடிக்கும்...
...உமா
தேர்வுகளில் முழு வெற்றி பெறும் வழிகள்!
by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
தேர்வுகளில் சாதனை செய்!
ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
தேர்வுகளில் சாதனை செய்!
ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
- நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.
- தொடர்ந்து ஒரேயடியாக மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்(ஒரு 20 நிமிடங்கள்).
- எல்லா பாடங்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள்.இடம் மாற்றி மாற்றிப் படித்தால்தான் மனதில் நன்றாகப் பதியும்.
- தொடர்ந்து ஒரே Subject பாடங்களை படிக்காதீர்கள். ஒரு Subject-ல் ஒரு பாடம் படித்ததும் வேறு Subject-ல் உள்ள பாடங்களை எடுத்துப் படியுங்கள்.
- பாடங்களைப் புரிந்து படியுங்கள்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
- பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது –Revision பார்ப்பது அவசியம். Revision தேர்வுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
- ஆசிரியர் திருத்திக் கொடுக்கும் உங்கள் விடைத்தாள்களை திரும்பவும் பார்வையிடுங்கள்.நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள்.
Wednesday, February 1, 2012
பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி?
by Abdul Basith
நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.
கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக(!!!!!!!!) பெறலாம். ஒருவருடத்திர்கான கட்டணம் பத்து டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஐநூறு ரூபாய். அப்படி வாங்குவதற்கு VISA, Mastercard வசதியுடைய கிரெடிட்/டெபிட் கார்டு தேவை. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு Google Wallet (முன்னர் இதன் பெயர் Google Checkout) என்ற சேவையை பயன்படுத்துகிறது. இது Paypal போன்று இணையத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியாகும்.
மேலும் டொமைன் வாங்கிய பின் அதனை நிர்வகிக்க Google Apps என்னும் வசதியை நமக்கு தருகிறது. இங்கு (admin@bloggernanban.com போன்று) நம் தளத்துடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்கவும், Sub-Domain-களை உருவாக்கவும் செய்யலாம்.
நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.
கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக(!!!!!!!!) பெறலாம். ஒருவருடத்திர்கான கட்டணம் பத்து டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஐநூறு ரூபாய். அப்படி வாங்குவதற்கு VISA, Mastercard வசதியுடைய கிரெடிட்/டெபிட் கார்டு தேவை. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு Google Wallet (முன்னர் இதன் பெயர் Google Checkout) என்ற சேவையை பயன்படுத்துகிறது. இது Paypal போன்று இணையத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியாகும்.
மேலும் டொமைன் வாங்கிய பின் அதனை நிர்வகிக்க Google Apps என்னும் வசதியை நமக்கு தருகிறது. இங்கு (admin@bloggernanban.com போன்று) நம் தளத்துடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்கவும், Sub-Domain-களை உருவாக்கவும் செய்யலாம்.
Tuesday, January 31, 2012
தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்
பதிவுலகம் முழுவதும் ஒருவித சோகம் பரவியுள்ளது. அதற்கு காரணம் கூகுள்
இன்று சத்தமில்லாமல் ப்ளாக்கர் தளங்களில் செய்த ஒரு மாற்றம் தான். அதாவது
இலவச ப்ளாக்கர் தளங்களில் உள்ள .blogspot.com
என்னும் முகவரியினை சில நாடுகளில் மட்டும் .com என்பதற்கு பதிலாக .in,
.com.au என்ற முகவரிகளாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களைப்
பற்றியும், இதன் விளைவுகளை பற்றியும் பார்ப்போம்.
தொடர்ந்து படிக்க... http://www. bloggernanban.com/2012/01/ blogger-ready-to-censor.html
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Sunday, January 29, 2012
சொர்க்கத்தை மண்ணில் காண்போம்

மரணம் நேர்ந்ததும்
மண்ணின் தொடர்புகள் எல்லாம்
துண்டிக்கப்பட்டுவிடுகின்றன
மரணத்திற்குப் பின்
நிம்மதிதான்
எஞ்சி இருக்கப் போகிறது என்றாலும்
மண்ணில் உள்ள இனிய வாழ்வை
மரணத்தால் நாம் இழக்கிறோம்
அதை இழக்க
எந்த உயிரும் சம்மதிப்பதில்லை
ஆகவே
சொர்க்கத்தை
மண்ணில் காண்போம்
யாவரும் வாழவும்
நாமும் வாழவும் வாழ்வோம்
மரணம் பற்றிய சரியானதும்
நிம்மதியானதுமான அறிதல்தான்
மனிதனுக்கு அந்த
உயர்வான உணர்வுகளைத் தரும்
Source : http://anbudanbuhari.blogspot.com/
------------------------------------------------------------------------------------------------------
Thursday, January 26, 2012
பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!
தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.
சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.
Subscribe to:
Posts (Atom)






