Tuesday, November 6, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 6)

                                         பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 6


அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நான், மிகப்பெரிய அரங்கத்தின் நுழைவாயிலை நோக்கி பயணமானேன். நுழைவாயிலில் நடைமுறைப் பணிகளை முடித்துக்கொண்டு அருகே ராஜ கம்பீரத்துடன் காட்சியளிக்கும் உயர்ந்த சீன மனிதன் காட்சிப் பொருளாக நிற்பதைக் கண்டு வியந்தேன். காரணம் யாராலும் அவனை சிரிக்க வைக்கமுடியவில்லை !


“ குவாங்சோ “ ( Guangzhou ) நகரில் முக்கிய பகுதியாக கருதப்படுகிற இடங்களில் ஓன்று “Pazhou”  மற்றொன்று  “Liuhua”  இப்பகுதியில் அமைந்துள்ள அரங்கங்களில் நடைபெறுகின்ற இவ்வணிகச்சந்தை, மூன்று கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டங்களும் முறையே ஒரு சிறிய இடைவெளியுடன் ஒவ்வொன்றும் ஐந்து நாட்கள் நடைபெறும்.

Monday, November 5, 2012

முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது



முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அவருடைய பணி தொடரட்டும்." நாகூர்  ரூமி

ஜே .எம் சாலி அவர்கள் எனது உறவினர் ,நண்பர் ,சமகாலத்தில் படித்தோம் .(நான் சென்னை லயோலா அவர் பிரெசிடென்சி) எனது தாய் மாமாவின் பேத்தியை மணமுடித்தவர் . வாழ்த்துகள். மகிழ்வு


(படத்தில் வடகரை மகதி,ஜே .எம் சாலி, முகம்மது அலி ஜின்னா- சிங்கப்பூரில்)



ஜே .எம் சாலி அவர்களது குடும்பத்தில் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள். ஜே .எம் சாலி அவர்களது அண்ணன் ஜே .எம் ஹுசைன் அவர்கள் மிகவும் சிறந்த எழுத்தாளர். இவர்களது சொந்த ஊர் எரவாஞ்சரி. அவரது வாழ்க்கைத் துணைவி நீடூரைச் சார்ந்தவர் .

சிங்கப்பூர் நான் முதல் முறையாக சென்ற பொது உடனிருந்து  சிங்கப்பூர் சுற்றிப்பார்க்க மிகவும் உதவினார் .அவர் அப்பொழுது தமிழ் முரசு தமிழ் தினசரியில் பணியாற்றி வந்தார் .
அந்தப் பத்திரிக்கையில் என்னை பேட்டி கண்டு எழுதினார்.
"அரசியல் உறுதிப்பாடினால்   சிங்கப்பூர் வழிகாட்டுகிறது " என்று அதற்கு தலைப்பு கொடுத்திருந்தார்.

தமிழக வர்த்தகர் கருத்து பல இன இக்கியத்திற்குப் பாராட்டு
சிங்கப்பூர் இப்போதைய தலைமைதுவத்தின்  கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகரும், வழக்கறிஞருமான திரு எஸ்.இ.எ.முகம்மது அலி ஜின்னா தெரிவித்தார் .
....என்பதோடு அந்த செய்தி தொடர்கிறது (தமிழ் முரசு 7-12-1970)

தொடர்ந்து படிக்க அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

 முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி") 















ஜப்பானைப் பார்


by முனைவர் அ.இரபியுதீன்.


 ஜப்பானில் உள்ள  கோபே நகரில் மாணிக்கப் பொருட்காட்சி நடந்தது. எங்கள்  "செலக்டிவ் ஜெம் அவுஸ்" அந்தப்  பொருட்காட்சியில்   கலந்து கொண்டது. நானும் போயிருந்தேன்.
 நான் ஜப்பானுக்குப் போவது இது முதல் முறை அல்ல. பல முறை ஏற்கனவே போயிருக்கிறேன். ஆனால் இப்பொழுதுதான் ஜப்பானை சுற்றிப் பார்க்க - ஜப்பானிய மக்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது.
 ஜப்பானைப் பார்த்துத் திகைத்துப் பொய் விட்டேன் ! இரண்டாவது  உலகப்போரில் அடியோடு அழிந்து போன நாடு,ஜப்பான். உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானில்தான் விழுந்து, பேரழிவை ஏற்படுத்தியது. அடியோடு அடிமன் வேரோடு அழிந்து போன ஜப்பான், இன்று துளிர்த்து, தழைத்து, கிளைத்து, விழுதுகள் விட்டு, வின் முட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்பதைப் பார்க்க, எனக்கு வியப்பாக இருந்தது.
 அழிவு ஏற்பட்டு அரை நூற்றாண்டுதான் ஆகிறது. அதற்குள் ஜப்பான் எப்படி எழுந்து நிற்கிறது! எப்படி வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு ஈடாக விளங்குகிறது ! அறிவியல் வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சிவிட்டது! குறிப்பாகத் தொலைத் தொடர்பு இயலில் இன்று ஜப்பான்தான் ஏ ஒன்!
 ஜப்பானியர்களும் என்னமாக வளர்ச்சி அடைந்து விட்டார்கள் ! பொதுவாக ஜப்பானியர்களை "குள்ளர்கள் " என்று கூறுவோம். இன்று அவர்களை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது!
 இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது ?

Saturday, November 3, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 5)

                                         பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 5

எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................! மறுமுனையில் என் சீன நண்பன் “ஜேம்ஸ்” எனக்காக “XingGongDong”  மெட்ரோ ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பதைக் கூறினான்.
ரயில் மெதுவாக நின்றது.......ரயிலிருந்து இறங்கிய நான், எனது நண்பனுடன் நம்மைப்பற்றிய விவரங்களைப் பதிவு செய்து “அடையாள அட்டை” ( Badge ) பெறுவதற்காக அருகில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தையின் ( Trade Fair ) பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். முதல் நாள் என்பதால் கடுமையான கூட்டமாகக் காணப்பட்டது.


1.    நுழைவுக்கட்டணம் RMB 200 ( Chinese Currency ) செலுத்தி ( முதல் தடவையாக பதிவு செய்பவர்கள் மாத்திரம் இக்கட்டணத்தை செலுத்தவேண்டும் ) எனது பாஸ்போர்ட், பிஸ்னஸ் கார்டு மற்றும் இரண்டு போடோக்களைக் அவர்களிடம் கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டேன்.
2.    இவ்அடையாள அட்டை வணிகச் சந்தை நடக்கும் அரங்கத்திற்குள் நாம் நுழைவதற்கு உதவும்.
3.    ஒரு முறை பதிவு செய்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் இருமுறை நடக்கும் இவ்வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) நம் நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் விசா பெற இலகுவாக நமது முகவரிக்கு இவ்வணிகச் சந்தையின் அமைப்பாளரால் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
4.    இவ்அடையாள அட்டையைப் பயன்படுத்தி நிரந்தரமாக வணிகச் சந்தையில் நாம் பங்குபெறலாம்.

Friday, November 2, 2012

வேண்டியதை வேண்டு !


வார்த்தைகள் விளையாடுகின்றன
வேதனைகள் கொப்பளிக்கின்றன
சோதனைகள் செயல்படுத்த துடிக்கின்றன
மனமே மறந்து விட துடிக்காதே!
மனமே செயல் படுத்தி மறந்து போ!
தேவைப் பட திரும்பி வா
சேவையாக செய்ய வேண்டியதை செய்து விடு
இது உனக்காக அல்ல
அது அவனுக்காக (இறைவனுக்காக  )  

 வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

 பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

Thursday, November 1, 2012

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -3)


நான்  பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது  பாரிசிலிருந்து லண்டனிலிருந்து செல்வதற்கு விசா வாங்க பாரிசில் உள்ள லண்டன் விசா வாங்க லண்டன் விசா தரும் அலுவலகம் சென்றேன் . விசாவிற்கான தொகையை முதலிலேயே கட்டி விட வேண்டும் .விசா கிடைக்க வில்லையென்றால் கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதனை   அறிவிப்புப் பலகையில் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

எனது முறை வந்ததும் நான் விசா வழங்கும் அதிகாரியை சந்தித்தேன் .
அவர் கேட்ட முதல் கேள்வி " எதற்காக லண்டன் போகிறீர்கள்"
'லண்டன் சுற்றிப் பார்க்க செல்கின்றேன்' எனது பதில்.
' உங்கள் நாட்டில் இந்தியாவிலேயே விசா வாங்கி வந்திருக்கலாமே'
'நான் பாரிஸ் வந்தது எனது உறவினரைப் பார்க்க ஆனால்  பாரிஸ் வந்த பின்தான் லண்டன் அருகில் இருப்பதால் லண்டனையும்  போய்  பார்ப்போம் என்ற ஆர்வம் வந்தது' .
அவர்களது எண்ணம் லண்டன் வருபவர்கள் அங்கேயே வேலை செய்ய தங்கி விடுவார்கள் என்பதுதான்.

சீனா பயண அனுபவம்! - (பகுதி 4)

                                        பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 4

என் வீட்டிற்க்கு நாங்கள் வந்தததும் என் சீன நண்பன் “ஜேம்ஸ்“ என்னிடம் “ ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie ( நன்றி வருகிறேன் ) என்று சொல்லி விடைப்பெறத் தயாரானான்.

அப்பொழுது என்னுடைய “உம்மம்மா” கொடுத்தனுப்பிய நம்மூர் “நூர் லாட்ஜ்” அல்வா, மௌலானா “தம்ரூட்” , சொட்டை சாகுலாக்கா “பனியான்”, வல்கூஸ் ராத்தா “நானக்கொத்தான் “ போன்றவைகளை அவனுக்குக் கொடுத்து வழியனுப்பினேன்.

அவனும் பதிலுக்கு சீனர்கள் விரும்பி பருகக்கூடிய “கிரீன் டீ” பாக்கெட்டை என்னிடம் தந்தான். கிரீன் டீயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ( ! ? )ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதாக ஒரு கருத்து (?) நிலவுகிறது.


மேலும் அவன் தந்த சிம் கார்டையும் ( China Mobile ) வாங்கி வைத்துக்கொண்டேன்.