Sunday, April 8, 2012

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்

  Surat Al-Mulk (The Sovereignty) - سورة الملك

Sahih International
[He] who created death and life to test you [as to] which of you is best in deed - and He is the Exalted in Might, the Forgiving -
Tamil 
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

Surat Al-Baqarah (The Cow) - سورة البقرة

 2:56

Sahih International
Then We revived you after your death that perhaps you would be grateful.
Tamil
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.

2:95



Sahih International
But they will never wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers.
Tamil 
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.

Source ; http://quran.com/67 Copyright © Quran.com. All rights reserved.


The Qur'an Says... (part1)
View more PowerPoint from Xenia Y
==============================================================

Friday, April 6, 2012

வெகுளாமை - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

 வெகுளாமை
குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கா.
மு.வ உரை:

    பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.

மு.வ உரை:

    ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

 ---------------------------------------------
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

Wednesday, April 4, 2012

நம் தொலைபேசியும்,செல்போனும் நம்மைப்பற்றி வெளிப்படுத்துவது என்ன!

உங்கள்  தொலைபேசியை நீங்கள் கவனமாக கையாளவில்லையென்றால் அது உங்கள் வாழ்வையே திருப்பி போட்டுவிடும் . நீங்கள் சேர்த்து வைத்த விபரங்கள் அனைத்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்து நழுவவிடாமல் இருக்க உங்கள்  தொலைபேசியை பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் முன்னெச்சரிக்கையாக   அதில் இருக்கும் விபரங்களை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைத்திருங்கள். மிக முக்கியமான அழைப்புக்களுக்கு மட்டும் பதில் கொடுக்க அதனை கையாளுங்கள், அடுத்தவர் கையில் அதனை கொடுக்கும்போது அது உங்கள் பார்வையிலேயே இருக்க வேண்டும்.அதில் உள்ள முக்கிய விபரங்களை  திருடவும்,அழிக்கப்படவும் வாய்புகள் உண்டு . குழந்தைகள் கையில் இருக்கும்போது அது விளங்காமல்,விளையாட்டாக பல தவறுகள் செய்து விடலாம்.

முக்கியமாக களவு போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் உதவிக்கு ஒரு விளக்கப்படம் தரப்பட்டுள்ளது

கல்வி மற்றும் அறிவியலில் இஸ்லாத்தின் பங்கு!

 நாகரீக உலகில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நாம் கல்வி மற்றும் அறிவியலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமாக உள்ளது. தற்பொழுது இஸ்லாமிய நாடுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இது இஸ்லாத்திற்கு புதிதல்ல.  குரானை நாம் ஆராய்ச்சி செய்தால்  அனைவற்றையும் நாம் பெறலாம். பல விஞ்ஞானினிகளுக்கு அது வழிகாட்டியாக இருந்துள்ளது. ஏற்கனவே 19 ஆம் நூற்றாண்டில் எகிப்து, ஓட்டோமேன் துருக்கி மற்றும் பாரசீக சில முஸ்லீம் நாடுகளில்  அறிவியல் மற்றும் குறிப்பாக மருத்துவம் கற்று தரப்பட்டு அங்கு உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC   
அனைத்து மட்டங்களிலும் இந்த நூற்றாண்டின் கல்வி நிறுவனங்கள்  இஸ்லாமிய உலகம் முழுவதும் இக்கல்வி முறை பல்கி பெருகி வருகின்ற
 கணிதத்தின் உயிரியல், நவீன தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில்  பெரும்பாலும் மேற்கு பயிற்சி கல்வி நிலையங்களில் இணைந்து கொண்ட குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள் ஆண்கள், பெண்கள் ஒத்துழைப்புடன்  தயாரிக்கப்பட்டவைகளும் இதில் அடக்கம்.  
 இஸ்லாமிய உலகின் முன்னணி சிந்தனையாளர்கள் தற்பொழுது உலகளவில் ஒன்று கூடி மாநாடு நடத்தி  நவீன அறிவியல் முக்கியத்துவத்தை  யோசித்து இணைந்து செயல்பட முனைவது மகிழ்வினைத் தருகின்றது

Tuesday, April 3, 2012

ஊர் போய் வரலாம் வாங்க! - இதுவல்லவோ ஊர்!



  உலகமெல்லாம் ஓடிப் பறந்தாலும் நம் ஊரைப்போல் ஆகுமா என்பதோடு 'எங்கள் ஊர்' வந்தாலே மன நிறைவு வந்து விடும் ஏன்று சொல்பது நம் இயல்பு,அது உள்ளத்தில் மகிழ்வைத் தருகின்றது என்பது உள்ளத்திலிருந்து வரும் உண்மை வெளிச்சங்கள் . அமரிக்காவுக்கு போனால் இந்தியர் இருக்கும் இடம் தேடி பின்பு தமிழ்நாட்டுக்காரரை நாடி அதன்பின் தன் மாவட்டம் ,பின்பு வட்டம் கடைசியில்  நம் ஊர் நண்பரைக் காண பேரின்பம் .இதற்குத்தான் மண் வாசனை நம்மோடு ஒட்டியுள்ளது போலும் . ஒவ்வொரு ஊரைப் பற்றி அந்த ஊர் நண்பர்கள் எழுதியுள்ளதனை தொடர்ந்து (பகுதியாக )அறிவோம்

1.எங்கள் ஊர்

எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.

எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.
திரு சேவியர் ( கவிதையாக சில வரிகள் மட்டும் )

எங்கள் ஊர் « கவிதைச் சாலை

----------------------------------------
2.எது என் ஊர்
கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!


படக்காட்சி


Watch videos at Vodpod and more of my videos

9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி தரும் தகவல்

"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 Read more about இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்
 Source : www.inneram.com 
 மேலும் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்