ஆக்கம்: சபீர் –
//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு...
வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே…
நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,
மொத்தக் கனவுகளின்
ஒற்றைப் பலன்!