
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நாடுகளின் பட்டியலில் ஹாங்காங் உள்ளது. உலகின் மிக முக்கியமான நிதி மையங்களில் ஹாங்காங் ஒன்றாகும். இரவு நேரத்தில் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அழகை அள்ளித் தந்து கவரும் ஹாங்காங் சுற்றுலா பயணிகளின் மனதில் நிலைத்த இடம் பிடித்துவிடும் .உலகில் சிறந்த, தொடர்ந்து வளர்ச்சியடையும் நாடுகளில் ஹாங்காங் முக்கிய இடம் வகிக்கின்றது . பிரிட்டன் நாடால் குத்தகைக்கு ஆட்சி செய்யப் பட்டிருந்த நாடு திரும்பவும் சீன நாட்டிற்குள் இணைந்து விட்டாலும் சீனா ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை தந்துள்ளது .1984 இல் சீனாவும் பிரிட்டனும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் படி 1997 ஜுலை 1 முதல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது . ஒப்பந்தப்படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் வரை முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சீன மொழியோடு ஆங்கிலமும் அந்நாட்டு மக்களுக்கு தெரிந்த மொழியாக உள்ளது. உலகில் மக்கள் நெருக்கமான இடங்களில் ஹாங்காங்கும் ஒன்றாகும். பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள் . பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடு ஹாங்காங். இதனை "ஆசியாவின் நகரம்" என்றும் அடைமொழி கொடுத்து அழைகின்றனர்.
ஹாங்காங் சீனாவின் மகுடமாக திகழ்கின்றது . 90 % சீன மக்கள் நிறைந்த ஹாங்காங்கில் " திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற மனதோடு இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்தில் அதிகமாக ஹாங்காங்கில் சென்று தங்குவதற்கு உள்ள வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டார்கள் .பலர் குடி உரிமைப் பெற்றும் வாழ்கின்றார்கள் .
ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்...