புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம். ரமழான் வரும்போது இரவுகள் அமல்களால் விழிப்படைகின்றன. இருள் அகற்றப்பட்டு குர்ஆன் திலாவத்துக்களாலும், தொழுகைகளாலும், இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகிறது. ரமழான்
மாதம் வருகையில் நிறைய நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம் என மகிழும் அனேக
இஸ்லாமியர்களைப் போலவே ரமழானின் இரவுகளை வீண் விளையாட்டுக்களிலும்
வியாபாரங்களிலும் கழித்துவிடலாம் என எண்ணித் திளைப்பவர்களும் நம் மத்தியில்
இருக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் அனேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை விளையாட்டிலேயே கழித்துக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.
'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
