Showing posts with label வாழ்த்துங்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துங்கள். Show all posts

Tuesday, December 31, 2013

வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.

வாழ்த்துகள மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது

இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இல்லங்களில் வாழ்த்திதான் வரவேற்கின்றோம்
இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்

வாழ்த்துவதில் நாளென்ன! கிழமையன்ன!
வாழ்த்துவதில் ஜாதியென்ன! மதமென்ன!
வாழ்த்துபவர் மனிதஇனம் தானே.
வாழ வழியை காட்டியதுதானே மார்க்கங்கள்
வாழ்த்துவதற்கு வாழத்தானே வேண்டும்
வாழ்பவனை வீழ்த்த விரும்புபவன் வாழ்த்த முடியுமா!
வாழ்த்துவதை வாழ்நாள் வரை தொடரவேண்டும்

வாழ்த்தும் மனிதரும்
வாழ்த்தை வரவேற்கும் மனிதரும்
வையகத்தில் வாழும்வரை
வையகத்தில் வாழும் மனிதரை வீழ்த்த மனம் வருமோ !
வாழ்வெல்லாம் வாழ்த்தி வாழ்வோம்