Showing posts with label வளர்க்கும் முறை. Show all posts
Showing posts with label வளர்க்கும் முறை. Show all posts

Friday, November 29, 2013

அந்த பெண் ஓடிப் போயிட்டாள் !


 அந்த பெண் ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் யாரோடு ஓடிப் போயிட்டாள்

அந்த பெண் அவளுக்கு தெரிந்தவனோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண்ணுக்கு அவனை எப்படி தெரியும் !
அதுதான் தெரியலே !

அந்த பெண் அவனை ஏன் விரும்பினாள்?
அதுவும் தெரியலே !

அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
திருமணம் ஆகி விட்டது
திருமணம் ஆகியுமா ஓடிப்போனால் !
ஆமாம் .
அவளது கணவன் எங்கே ?
கணவன் பல ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கார் .
கணவன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறார் .
கடைசியா எப்போ வந்தார்?
கடைசியா ஊருக்கு வந்து ஏழு அல்லது எட்டு வருடம் ஆகி இருக்கும் .
அப்படியா !
ஓடிப்போனது குற்றம்தான் .