Showing posts with label வலைப்பூ. Show all posts
Showing posts with label வலைப்பூ. Show all posts

Tuesday, December 6, 2011

உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...


என்னைப் பற்றி!
நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :

டைரக்ட் மார்க்கெட்டிங் :

தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவரோ   ஒருவர்  பாராட்டிவிட்டாரே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.