-திருக்குர்ஆன் 2:42
'நான் சும்மா விளையாட்டுக்கு
சொன்னேன் அதை ஏன்டா மற்றவர்களிடம் சொன்னாய். அது பெரிய செய்தியாகப் போய் ஊரெல்லாம் அதைப் பற்றி பேச அந்த
குடுப்பம் சிதையும் அளவுக்கு ஆக்கிவிட்டாயே .பாவம்டா உண்மையிலேயே அவங்க நல்லவங்கடா'..
என்று மிகவும் வருந்துபவர்களைப் பற்றி அறிவோம் . தங்கள் நேரத்தினை ஓட்டுவதற்கு வாய்
கூசாமல் பேசிவிட்டு வருத்தமடைவதாகச் சொல்லிவிட்டு
சிலநாட்கள் கழித்து அதே வேலையில் ஈடுபடுவார்கள். இது சில மக்கள் மத்தியில்
இருந்து வரும் வழக்கம் . ஆனால் இப்பொழுது பத்திரிகைக்காரர்களும் அரசியல்வாதிகளும்
மிகவும் சிறப்பாக ஈடுபட்டு நாட்டிற்கே அழிவை உண்டாக்குகின்றனர் .(அமேரிக்காவுக்கு இது ஒரு கை வந்த கலை என்பது உலகமே அறியும்) இதில் பெருமையாக 'கிசு கிசு' என்று தலைப்பே போட்டும் சிலர் எழுதுகின்றனர்.அதனால் விளையும் விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.
இதனால் மதக் கலவரம் ஜாதிச் சண்டைகள் வந்து விடுகிறன. சில நாடுகள் மற்ற நாடுகளில் இதனைக்
கிளப்பி விட்டு சண்டையை உண்டாக்கி தாங்கள் குளிர் காய்கின்றனர்.
