வெய்யிற் காலம் வந்து போகும்
வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்
மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்
வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்
உதயம் தொடங்கி அந்தி வரைக்கும்
உணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்
இதயம் கொள்ளும் இறைமை நினைவை
இருந்தும் நாவில் ஏனோ பொய்கள்?
நோன்பில் வந்த ஞான வேதம்
நன்றாய் ஓத நன்மை கற்போம்
நோன்பில் மட்டும் ஓதி விட்டு
மூடி வைத்தல் யாரின் குற்றம்?
Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts
Monday, June 30, 2014
Wednesday, July 18, 2012
ரமலான்.. புனித ரமலான்... அமலால் நிறையும் ரமலான்
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்
பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்
குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*
திண்ணமுடன் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்
--
ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.
ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்
குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்
கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்
ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்
*திடலுக்கு = மஹ்ஷர் என்னும் judgement day ground
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
Sunday, July 15, 2012
நன்மையை தேடும் ரமலான்.(துபாய் வாழ் தமிழ் முஸ்லிம்களிடம் பேட்டி -ஆங்கில வீடியோ இணைப்பு )
இறைவனால் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்ட சிறப்பான மாதங்களில் ரமலான் மாதமும் ஒன்று.இறைவனது அருளால் அருளப்பட்ட குர்ஆனின் முதல் வரிகள் ரமலான் மாதத்தில் கிடைத்தாலும் ரமலான் சிறப்புடையாதாக இருக்கின்றது. இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளில் ரமலானும் இருக்கின்றது. நன்மையை தேடுவதற்கும் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும் சிறப்பான மாதமாகவும் இருக்கின்றது . ரமலான் மாதத்தினை முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வமாக வரவேற்று அம்மாதம் முழுவதும் சிறப்பு மிக்க நோன்பினை கடைப்பிடித்து மகிழ்கின்றனர். மைந்தனின் ஆரோகியதிற்கும் மகிழ்வுக்கும் வழி காட்டும் ரமலானை வரவேற்போம் மற்றும் அதற்குரிய சிறப்பினையும் மரியாதையும் கொடுப்போம். நோன்பு நோற்றுவிட்டு அதனை திறக்கும்போது ஏற்படும் மகிழ்வே சிறப்பானது. உலகில் பல்வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு முறையில் நோன்பு திறக்கும் ஆகாரத்தினை அருந்தியும் உண்டும் மகிழ்கின்றார்கள். முதலில் ஒரு இனிப்பு அதுவும் பேரித்தம் பழம் சாப்பிடுகின்றனர். இது நபிவழியாக மட்டுமில்லாமல் உடலுக்கு உடன் சத்து தரக் கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தயாரிக்கப் பட்ட நோன்புக் கஞ்சி அருந்தி நோன்பு திறக்கின்றனர். நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது.
தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் நோன்பு கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில் தயாரித்தாவது அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். நோன்பின் அருமையை அறிந்து தற்பொழுது மற்ற மார்க்க சகோதரர்களும் இதனை நம் முஸ்லிம்கள் போல் நோன்பு வைக்க விரும்பி செயல்பட விரும்புகின்றனர். ஆனால் நம் மார்க்கத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் அதன் அருமையை அறியாமலும் அந்த ரமலான் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் இருப்பது மிகவும் வருந்த வேண்டியதாக உள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழிக் காட்ட நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
Ramadan in Dubai is a unique and different experience due to the fact that people from different parts of the world live and bring their own cultural heritage to this cosmopolitan city.
Thursday, July 28, 2011
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள
அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன்
பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன்
பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய்
பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும்
தெரிவித்தார்.மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/2011072818138/south-african-cricketer-parnell-accepts-islam-amla-link
Subscribe to:
Posts (Atom)





