முத்தங்கள் முக்காடாகும் நாள்
இன்று இனிய நாள்
இன்று இனியவள் என்னோடு இணைந்த நாள்
இன்று இனியவளின் முகம் மறைப்பேன்
இன்று இனிய முத்தங்கள் இனியவளின் முக்காடாகும்
இதயங்கள் இனிய மகிழ்வலையால் மோதும்
இதயங்கள் இறைவனை துதி பாடும்
இதயங்கள் அமைதியாய் ஆடி அமைதியடையும்
இதயத்தின் அமைதி நித்திரையில் அடங்கிவிடும்
