Showing posts with label மக்கட் பேறு. Show all posts
Showing posts with label மக்கட் பேறு. Show all posts

Wednesday, July 11, 2012

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3) 
 அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி



                                           அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
மக்கட் பேறு :
 தமது குடும்பம் விரியடையவே தம்மால் விரிவாக்கப்பட்ட நீடூர்  ஜின்னா தெருவில் வீடு ஒன்றைக் கட்டி ஹாஜிமஹால் என அதற்குப் பெயர் சூட்டி அதில் வாழ்ந்து வரலானார்கள். வளமார் விரிந்த நெஞ்சோடு,  விஞ்சு  புகழ் வள்ளற்றன்மையோடு நிறைந்த மக்கட் செல்வத்தையும் பெற்றிருந்தார்கள். ஷபீர் அஹ்மத், அப்துல் ஹமீத், முகம்மது ஜக்கரியா, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது சயீத், முகம்மது அலி ஜின்னா  என்ற ஆண் மக்களும்.
ரஹ்மததுன்னிசா, பாதிமாஜின்னா என்ற பெண் மக்களும் பிறந்தனர்.

  நியாயம் வழங்குதல் :
ஹாஜியார் அவர்கள் தஞ்சை மாவட்டம் முழுதும், அதைத் தாண்டியும் அறிமுகம் ஆனவர்கள். சொல்லாலும் வாக்காலும், இறைவழி நின்று செயலால் அதைக் கட்டிக்காத்த அந்த பெருமகனின் சேவை மக்களிடையே ஏற்பட்ட எண்ணிறந்த பிணக்குகளை மனமுறிவுகளை நேர்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சச்சரவுகள், சண்டைகள்,
வழக்கு மன்றம் செல்லாமலே ஹாஜியார் அவர்களின் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றன.