'பாங்கு சொல்லிட்டாங்க. ஜும்மாவுக்கு போய் ஹஜ்ரத் ஹதீஸ் சொல்வார் போய் கேள் .சீக்கிரம் கிளம்பு '
-தாய்
'ஒவ்வொரு வாரமும் தான் ஹதீஸ் சொல்கிறார் .நான் கேட்கிறேன். மனதில் நிற்காமல் மறந்து விடுகிறதே. பின் ஏன் அவசரப் படுத்துகிறாய்.'
-மகன்
'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். நல்லா உண்கிறாய் அது உன் வயிரிலேயே இருந்துக் கொண்டேவா இருக்கு. அந்த உணவுதான் உன்னை உயிர் வாழ வைக்கிறது. அதுபோல் தான். அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும். அது உன்னை அறியாமலேயே உன்னை உயர்வடையச் செய்யும்.உனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அதன் அருமை உனக்கு இப்போது விளங்காமல் போகலாம். ஆனால் அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும் உன் உள் மனதில் உறைந்து நிற்பதனை காலம் வரும்போது நீ அறிவாய். '
-தாய்
---------------------------------
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 604.
