Showing posts with label பேச்சில் நளினம். Show all posts
Showing posts with label பேச்சில் நளினம். Show all posts

Monday, September 3, 2012

வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.


வெட்கம் என்பது ஆண் பெண்  இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று
வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக
நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.

வெட்கப்படும்  போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம்   சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக  இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.