Showing posts with label புத்தர். Show all posts
Showing posts with label புத்தர். Show all posts

Sunday, March 17, 2013

அகிம்சையின் அடித்தளம் இலங்கையில் ஆட்டம் போடுகின்றது

அகிம்சையை வளர்த்தவர் புத்தர் ,ஆனால் புத்தர் பெயருக்கு களங்கம் உண்டாக்கி சில புத்த பிட்சுக்கள் இலங்கையில் தோன்றி தன்னை விளம்பரம் செய்துக் கொள்ள அழகிய நாட்டையே அழிக்க திட்டம் தீட்டுவது தங்களுக்கே தெரியாமல் செயல்படுகின்றார்கள் .

நான் ஜப்பான் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு ஜப்பானிய பெண்மணி எனக்கு வழிகாட்டியாக கியாட்டோ புத்த கோவிலை சுற்றிக் காண்பித்து விளக்கம் தந்து கொண்டிருந்தார். புத்த மதத்தில் மாமிசம் சாப்பிடக் கூடாதே நீங்கள் இங்கு சாப்பிடுகிண்றீர்களே என்றேன் .அவர் அதற்கு பதில் சொல்லாமல் அருமையான புன்னகை பூத்தார். மார்க்கம் வந்தது ஆனால் மார்க்கத்தின் வழி முறைகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் ஜப்பானிய மக்கள் வாழ்கின்றார்கள் .அதற்கு நேர் எதிர் மறையாக் புத்த மத ஆடைகளை மட்டும் போட்டுக் கொண்டு இலங்கை வாழ புத்த பிட்சுக்கள் பலர் புத்த மதத்தின் பெயருக்கே களங்கம் விளைவிகின்றார்கள்.