Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Tuesday, November 19, 2013
வரவேற்பறைக் காட்சிகள்
வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.
சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.
Monday, March 25, 2013
உங்கள் வினாக்களும்; என் விடைகளும்
உங்கள் வினாக்களும்; என் விடைகளும்
அன்பானவர்களே,
இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் இயங்கும் “தடாகம் இலக்கிய வட்டம்”
என்னும் ஓர் இலக்கிய அமைப்பு என்னிடம் பேட்டி வடிவில் விடுத்திருந்த
வினாக்களும்; அவைகட்கான விடைகளும்
என்றும் உங்களின் ஆசிகளைத் தேக்கி-புகழ்
குன்றின் உச்சியை நோக்கி.
அன்புடன்
கவியன்பன் கலாம
01)உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்: அழகிய
கடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை உங்களின்
இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர் இனக்கலவரத்தால்
இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்
சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான்
எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.
நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்
(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.
எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்
அறிவும் நிறைந்த பெயரன்(மகள் வழி) அடங்கிய ஒரு சிறு குடும்பம். என்னுடன்
பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன், ஒரு தம்பி. உம்மா
அவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள் இருக்கின்றார்கள்.

Subscribe to:
Posts (Atom)