N.B. அப்துல் ஜப்பார், பல்கீஸ்பீ தம்பதியருக்கு, 1965ஆம் ஆண்டு பிறந்தவர் D.A. நூருத்தீன் அஹ்மத். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் கணினி மென்பொருள் துறையில் பட்டச் சான்றிதழும் பெற்று, அமெரிக்காவிலுள்ள ஸியாட்டில் நகரில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனந்த விகடன், முஸ்லிம் முரசு, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதில் இவரது எழுத்தார்வம் துவங்கியது. இந்நேரம்.காம் எனும் தமிழ் இணையச் செய்தித் தளத்தில் ‘மனம் மகிழுங்கள்’ என்ற தொடர் வெளியாகி அது வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சத்தியமார்க்கம்.காம் எனும் இணைய இதழில் சஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தோழர்கள்’, ‘தோழியர்’ எனும் தலைப்புகளில் தொடராக எழுதி வருகிறார். இவற்றுள் ‘தோழர்கள்’ முதல் பாகம், மனம் மகிழுங்கள் ஆகியன நூலாக வெளிவந்துள்ளன.
தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947 இதழ் சிறிது சிறிதாகப் பதிவாகி வருகிறது. தங்களது பார்வைக்கு - http://www.darulislamfamily.
அப்பக்கத்தில் அக்டோபர் 1947 என்பதை க்ளிக் செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும் -
http://www.darulislamfamily.
இன்ஷா அல்லாஹ் படித்துப் பாருங்கள்; கருத்திடுங்கள். பிறருக்கும் தெரிவியுங்கள்.
அன்புடன்,
-நூருத்தீன்