Showing posts with label பிறை. Show all posts
Showing posts with label பிறை. Show all posts

Wednesday, July 18, 2012

நோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே!

கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு என்ன? எல்லாரும் பழையபடி மகிழ்ச்சியாக, ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாடக்கூடிய நாள் எப்போது வரும்?


பதில்: நம் சகோதரர் என்ன கேட்கிறார் எனில், நோன்பு மாதத்தில் பிறை தொடர்பாக ஒரே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஊரில் பல பெருநாட்கள்; ஒரு குடும்பத்தில் பல பெருநாட்கள். மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை. இந்தப் பிரச்னை தீர என்ன வழி என்று கேட்கிறார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.

'நோன்பு வரும் பின்னே பிறைக் குழப்பம் வரும் முன்னே' என்று சொல்கிற அளவுக்கு இன்று சமுதாயத்தில் இதை ஒரு பிரச்னையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினார்கள், மூன் சைட்டிங்கா, மூன் ஃபைட்டிங்கா - பிறையைப் பார்ப்பதா, பிறைக்காகச் சண்டை போடுவதா எனும் ஒரு நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.