துப்பாக்கி கலாசாரம் மனதில் இன்னும் இருந்துக்
கொண்டே இருக்க அதை வைத்து தானும் பிழைக்க அலைகிறது சில மனித கூட்டம்
மற்றும் சில நாடுகள் .
மக்கள் வாழ்விழந்து வாடும் நிலை. அகதிகளாக
அலையும் நிலை. மொழிக்காகவும் சுமரியாதைக்காகவும் போராடும் நிலை . எங்கு
பார்த்தாலும் அகதிகள் .
இதே நிலை நபிகள் நாயகத்திற்கு மற்றும் அவர்கள்
தோழர்களுக்கும் வந்தது . ஓர் இறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல
முற்படும்போது . மக்காவை விட்டு அகதியாக மதினா சென்றார்கள் .இறைவனது நாட்டம்
மதீனா மக்கள் நாயகத்தையும் மற்றும் அவர்களது தோழர்களையும் நேசத்தோடு வரவேற்றார்கள் . அவரகளது அன்பு மொழி மற்றும் கொள்கையின் சிறப்பு அவர்களுக்கும் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் மிகப் பெரிய அழியாத வெற்றியை தேடித் தந்தது. இன்னும் தந்துக் கொண்டே இருக்கின்றது . இது தனது சுய லாபத்திற்காக நடந்தது அல்ல . மக்கள் நல் வாழ்விற்காக மற்றும் இறைவனது நேசத்திற்காக .
மனிதன் தனது சுய நலத்திற்க்காக துப்பாக்கியை படமாக்கி விளையாடுகின்றான். இதன் முடிவு அழிவு நிலையை மக்களுக்கு ஊக்குவிக்கின்றது .துப்பாக்கி காட்டி பணம் பண்ணும் கூட்டம் அழிவுக்கு வித்திடுகின்றது துப்பாக்கி விளமபரம் வேகமாக நடைபெறுகிறது
தீபாவளி முடிந்த பின்னும் .நாம் என்ன அமேரிக்காவில் வாழ்கிறோமா!
வெக்கமாக, கேவலமாக இருக்கிறதுஒரு நடிகர் முஸ்லிமாக நடிக்கப் போகிராராரம் முஸ்லிம்களை திருப்திப்படுத்த. யாரும் முஸ்லிமாக நடிக்க வேண்டாம் .முஸ்லிமாக வாழுங்கள் .
வெத்துத் துப்பாக்கியை வைத்து பையன்கள்
விளையாடுவதை பார்த்தேன். பயலுகள் சிறு வயதிலேயே துப்பாக்கி பிடிக்கும்
குணம் வந்து கெட்டு விடுவார்கள் என நினைத்து பிடுங்கி தூர வீசினேன்
.அப்பொழுதான் நிம்மதி ஆனது மனம் .
