Showing posts with label பகிரப்படும் செய்திகள். Show all posts
Showing posts with label பகிரப்படும் செய்திகள். Show all posts

Monday, February 17, 2014

பொது அறிவில் அசத்திய 2–ம் வகுப்பு மாணவி: 6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (வயது 7). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பொது அறிவில் மாணவி ஆஷிமா சாதனை படைத்து பலரையும் கவர்ந்து வருகிறார்.

Wednesday, October 30, 2013

அலறும் அமெரிக்கா !

ஒரே ஒரு நிகழ்வு அமெரிக்காவின் அஸ்திவாரத்தில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நான் 9/11 நிகழ்வைத் தான் சொல்கிறேன். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கு எதைக் கண்டாலும் பயம். காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்னு சொல்லுவாங்க இல்லையா, அதே நிலமையில் தான் இன்றைய அமெரிக்கா இருக்கிறது. இருட்டைப் பாத்தாலே பூதம் என்றும், சத்தத்தைக் கேட்டாலே வெடிகுண்டு என்றும் கதிகலங்கிப் போய் போதாக்குறைக்கு தொடந்து ஆங்காங்கே நடக்கும் துப்பாக்கிச் சூடுகள், குழந்தைகளின் மீதான தீவிரத் தாக்குதல்கள் இவையெல்லாம் அவர்களுடைய பயத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அந்த பயத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் உளவு வேலைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இணையத்தில் உலவும் எந்தச் செய்தியையும் திருட்டுத்தனமாக அமெரிக்காவால் படித்து விட முடியும் என சமீபத்தில் அதிர்ச்சிச் செய்தி வெளியானது. எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும் வகையில் அமெரிக்காவின் காதுகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டும் இருக்கின்றன.