நேற்று... 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 75 ம் வயதில் மரணித்த (இன்னாலில்லாஹி...) சகோ. கோ.#நம்மாழ்வார் க்கு செய்யப்படும் வெறும் இரங்கல் மட்டுமே நமக்கு பயனளிக்காது..! தொலைநோக்குடன் கூடிய அவரது நல்ல சிந்தனைகளை நாம் செயலில் கொண்டு வர வேண்டும்.
எங்கள் வீட்டில் இயற்கை உரமிட்டே தோட்டம் வளர்க்கிறோம். பூச்சிக்கொல்லிகளை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. இதுபோல... நம்மால் முடிந்த மட்டும் நம்மாழ்வாரின் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்து சொல்லி வளர்ப்பதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்..!
===///