இந்து மதத்தில் தம்பதியராகவே தெய்வங்களைக் கற்பித்துள்ளனர். ரிஷிகளும் முனிவர்களும் அவ்வாறே இருந்துள்ளனர் என நம்பப் படுகிறது.
சங்ககாலக் குடும்ப அமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண் இருந்தாள்.... களவு கற்பு எனும் இரு நிலையிலும்!
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (குறுந்தொகை. 135)
தற்காலத்தில் பெண்களின் நிலை அப்படி இல்லை. சுயமாக வாழும் அளவு பெண்கள் முன்னேறியுள்ளனர்.
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடன்" என்றுதான் சங்க கால மகளிர் வாழ்ந்தனர். இன்று குழந்தை வளர்ப்பிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிலும் எதிர்கால வடிவமைப்பிலும் தாய்மார்கள் செலுத்தும் அக்கறை அளவிட முடியாதது.
சங்ககால வாழ்வில் சமயம் வாழ்க்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. இக்காலத்தில் சமயங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் குடும்ப அமைப்பு உள்ளது.