இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது. திருமணம் என்பது பெண்ணின்
கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை
திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை
எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு!
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு
காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண
கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்
இதில்
சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை
திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது
கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை
அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு
திருமண மண்டபத்திலேயும் பேசுவார்கள் .
