முதன் முதலாக
மகன் அம்மாவை இழந்து
அப்பா மகளை இழந்த நிலையில்
அம்மா தன் பிள்ளைகளை இழந்த நிலையில்
தியாகத் திருநாளில் தொழ எழுப்ப முடியவில்லை
பிள்ளைகள் காசா போரில் தியாகமானதால்
கொடிய இஸ்ரேலிய அரக்கனால் அழிக்கப்பட்ட
உறவுகளை தேடி அலையும் கண்கள்
பச்சிளம் சிறார்கள் ஏவுகனையால் சிதறப் பட்டார்கள்
மகிழ்வுகள் மறைந்து
சோகங்கள் சூழ தியாகத் திருநாள்
விழிகள் அருவியாய் கண்ணீரைக் கொட்டுகின்றன