தமிழர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்புடைய, கடந்த 1977 ஆம் வருடம் வெளியான, தி மெசேஜ் (The Message) எனும் ஆங்கிலத் திரைப்படம் தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது.
Star Communications நிறுவனரும், தயாரிப்பாளருமான காயல்பட்டினத்தை சேர்ந்த K.M. முஹம்மது தம்பி அவர்களின் முயற்சியில் மொழி பெயர்ப்பாளர் திரு. ராஜேஷ் மற்றும் மவ்லவி காஞ்சி அப்துர் ரவூப் பாக்கவி அவர்களின் மொழி நேர்த்தியுடன் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
இத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது. தனித் திரையிடல் மூலமோ DVD வாங்கியோ பார்க்கலாம்.
இதற்கான DVD வெளியீட்டு விழா, சென்னை Four Frames Preview தியேட்டரில் நடந்தது. விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, முகம்மது தம்பி, எல்.கே.எஸ். இம்தியாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கவிஞர் அப்துல் ரகுமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்: அபூ ஸாலிஹா