Showing posts with label டாக்டர் அப்துல்லாஹ். Show all posts
Showing posts with label டாக்டர் அப்துல்லாஹ். Show all posts

Tuesday, August 20, 2013

மருத்துவ மனையில் டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசனின் இறுதித் தருணங்கள் !

ஞாயிறு அன்று காலையில் நண்பர் இப்ராகிம் காசிம் அவர்கள் மும்பையில் இருந்து போன் செய்து செங்கிஸ் கான் பாய் நாம் நினைத்தது போல் நடந்து விட்டது ! டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கிறார் என அவரது மகன் வளவனிடம் நான் பேசினேன் அவரது உடலை நம்மிடம் தர மாட்டார்களாம் இது பற்றி அனைத்து அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள் ! நான் உடனே மும்பையில் இருந்து இரவுக்குள் விமானத்தில் சென்னை வந்து விடுகிறேன் என்று கூறினார்.

சனியன்று இளையான்குடியில் நடை பெற்ற பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? ஆவணப்பட திரையிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னைக்கும் பேருந்தில் சமயத்தில் அவரும் நானும் டாக்டரின் உடல் நிலை குறித்தும் அவருடைய குடும்பத்தார் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் , அவரும் ஆவண ரீதியாக தனது பெயரை மாற்றாத நிலையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை இஸ்லாமிய அடிப்படையில் சிக்கல் வரலாம் ' என கவலைப்பட்டுக் கொண்டு வந்தோம் ! அது ஞாயிறு அன்று நடந்தே விட்டது !

நான் உடனடியாக வளவனின் நண்பரான தமுமுக வின் ஹாஜா கனி அவர்களுக்கு தகவலைத் தெரிவித்து விட்டு நீங்கள் அவரோடு பேசுங்கள் எனக் கூறிவிட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனிபா அவர்களிடம் ' 'அண்ணே அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் நாளை அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் நமது கருத்து கருத்து வேறுபாட்டை வைக்காமல் முன்னத்கவே கூட்டமைப்பு சார்பில் ஒரு முடிவு எடுத்து செயல்படுவது நல்லது ஆகையால் கூட்டமைப்பைக் கூட்டி முடிவு எடுங்கள் நாங்கள் இங்கு மருத்துவ மனையில் இருந்து நிலைமையை பார்க்கிறோம் எனக் கூறிவிட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனைக்கு விரைந்தோம்!