
கும்பகோணம்: வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு பணம் பெற்றுகொள்வோர் 12.36% சேவை வரியை செலுத்த வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சக உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந¢தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு பணம் அனுப்புவதற்காக முன்பு குருவி, ஏஜென்ட் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து அனுப்பினர். இ¢வ்வாறு அனுப்பப்படும் பணம் இந்திய நிதியமைச்சகத்தின் கணக்கில் வராமல் இருந்தது. இந்த பணம் ஹவாலா என்று அழைக்கப்பட்டது. இந்த நடைமுறையில் பணம் இந்தியாவிற்குள் வரும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. பல இடங்களில் இந்த பணம் கொண்டு செல்வதை கண்காணித்து கொள்ளையடிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்படுவதை மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி சில நிறுவனங்கள் பணம் அனுப்புவோரிடம் கமிஷன் தொகையை பெற்று கொண்டு, இந்தியாவில் உள்ளவர்களிடம் எவ்வித கமிஷனும் பெறாமல் பணத்தை வழங்கி வந்தது.