Showing posts with label சிந்தனையின் பிறப்பிடம். Show all posts
Showing posts with label சிந்தனையின் பிறப்பிடம். Show all posts

Friday, July 13, 2012

ஆளுமை சக்திக்கு ஆசைப்படாதோர் யார் !

ஆளுமைசக்தி பெற ஆசைபடுவதில் தவறில்லை அதன் மீது ஆசை இருபாலார்க்கும்  இருப்பது  இயற்க்கை, அதிலும் இப்பொழுது பெண்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது. பல்லாண்டு காலமாக அடக்கிவைக்கப்பட்ட பெண் மகள் புரட்சி மனப்பான்மையோடு வெகுண்டு வந்து தங்கள் ஆளுமையை வெளிபடுத்த முன்வந்துள்ளார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அந்த ஆளுமை சக்தி எவ்வாறு  இருக்க வேண்டும் எந்த அளவுக்கு அது கையாளப்பட வேண்டும் மற்றும் அந்த சக்தியைப் பெறுவதற்கு அவர்கள் கையாண்ட முறை நல்வழியின்  உந்துதளால்  வந்த விளைவா! என்பதனை சிறிது சிந்திக்க வேண்டிய அவசியமாகின்றது.ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.ஆளுமை சக்தி அடைய பல்வேறு முயற்சிகளை கையாண்டு வெற்றி பெற வேண்டிய நிலை. அது தவறான முறையில் வந்தால் முடிவும் தவறாகவே முடியும்.   


   நான் மிகவும் தகுதியுடைய ஆண் அல்லது பெண் அதனால் நான் அடந்கிப்போக வேண்டிய அவசியமில்லை என்ற ஆணவம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள வழிவகுக்கின்றது. ஹிட்லர் பெறாத ஆளுமையா! அவனது கொடுங்கோல் ஆட்சியின்  முடிவு  அவனோடு  பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை  வைத்து  இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவனிடம் இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி  மடிந்தவர் பலர் .