Showing posts with label காவல் நிலையம். Show all posts
Showing posts with label காவல் நிலையம். Show all posts

Sunday, October 7, 2012

நெல்லை சந்திப்பில் அன்புடன் புகாரி பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB


உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்
 Source : http://anbudanbuhari.blogspot.in/