அணையப்போகும் சூரியத் திரியில்
நெருப்பேற்றுவான் தமிழன்
சீற்றமிகு சுனாமிகளின் சக்தியில் உரமெடுத்து
பச்சைப்பயிர் வளர்க்கும்
அறிவியல் செய்வான் தமிழன்
தடம்மாறும் நிலத்தட்டுகளின்
தலையில் கொட்டி
பூகம்பத்தை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுவான் தமிழன்
இவைபோல் அறிவியல் சாதனைகளில்
மாற்றங்களை வாழ்வின்
ஏற்றங்களாக்கிக் கொண்டாலும்
நாளைய வீடுகளிலும்
தன் முலை எடுத்துப் பாலூட்டும் தாய்
ஓர் தமிழ்ப்பெண்ணாய் மாத்திரமே இருப்பாள்
Source : http://anbudanbuhari.blogspot.com/
Showing posts with label கவியரங்கம். Show all posts
Showing posts with label கவியரங்கம். Show all posts
Sunday, November 20, 2011
Tuesday, November 8, 2011
தமிழினம் நாளை - கனவு 1
வளைந்த எழில் வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய் கதிரோன் ஒளிர
அவள் கழுத்து ஆரமாய்
கோள்கள் அத்தனையும் கோத்துக்கிடக்க
ஓரமாய் அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய் மோவாயில் மிளிர
செவ்வாய் மட்டும் கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால் கவிதைகள் சொல்ல
அந்தக் கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச் சொற்களேந்த
பேரண்ட வெளிகளெங்கும் தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல் பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க
அட
இதையெல்லாம்விட அதிசயமாய்
அண்டசராசரப் பேரதிசயமாய்
ஆரும் கண்டிராத தேவ அதிசயமாய்
தமிழன் தமிழில் மட்டுமே உரையாடுவான்
Subscribe to:
Posts (Atom)


