Showing posts with label கவிஞர் வீரை.அப்துல் ரகுமான். Show all posts
Showing posts with label கவிஞர் வீரை.அப்துல் ரகுமான். Show all posts

Sunday, October 19, 2014

மனுஷங்களா.....அவங்க? - by. LKS.Mohamed Meera Mohideen

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், எங்கள் குடும்ப நண்பரும் மிகச்சிறந்த பாடலாசிரியருமான கவிஞர் வீரை.அப்துல் ரகுமான் என்னை காலை ஏழு மணி அளவில், அலைபேசியில் அழைத்தார்.. அப்போது நெல்லை விரைவு வண்டியில், சென்னையில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
கவிஞர் வீரை ரகுமான் அவர் கள் ,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக, நிறைய இஸ்லாமிய பாடல்கள் எழுதியுள்ளார்...
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்.......இறைவா வரம் தருவாய்,......கைகளை எந்திவிட்டேன்,.....சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே,கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே...முதலான சிறப்புக்குரிய பாடல்களும் அதில் உண்டு..
தமிழ் மீது மாறாத காதல் கொண்டவர்....