மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம்
ரவீந்தரைப்பற்றி எனது வலைத்தளத்தில் தொடர் எழுது வருகிற எனக்கு “இன்பக்கனவு” நாடகம் சீர்காழியில் அரங்கேறியபோது அது எந்த இடத்தில் நடைபெற்றது என்ற துல்லியமான விவரம் தேவைப்பட்டது. காரணம் எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டது சீர்காழியில் நாடகம் நடந்தபோதுதான். பதிவு செய்யப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு அது. அதைபற்றி அங்குள்ள ‘பெருசு’களிடம் விசாரிப்பதற்கு எனது நண்பர் சீர்காழி கவிஞர் தாஜ் அவர்களைத்தான் தொடர்பு கொண்டேன். அவரும் அதற்குரிய விவரங்களை உடனேயே சேகரித்துத் தந்தார். என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீனுக்கும் அப்படித்தான். தாஜ் என்றால் அப்படியொரு இஷ்டம். அவருடைய வலைத்தளமே அதற்கு சான்று பகரும்.
Showing posts with label எம்.ஜி.ஆர்.. Show all posts

Tuesday, October 21, 2014
Thursday, October 16, 2014
எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)
நாடக வாழ்க்கை
1951-ஆம் ஆண்டில்தான் ரவீந்தருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இணையில்லாத ஒரு நெருங்கிய பந்தம் ஆரம்பமாகியது. எம்.ஜி.ஆருடன் ரவீந்தருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை இதற்கு முந்தைய பதிவில் நான் விளக்கமாக எழுதியிருந்தேன்.
1953-ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற நாடகக் குழுவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் ரவீந்தர். அதற்கான ஆயத்தப்பணிகளை முறையாக நிறைவேற்ற முழுஉத்வேகத்துடன் அயராது பாடுபட்டார். இவர்கள் இருவருக்குமிடையே நிலவிய இந்த கலையுறவு பந்தம் இறுதிவரை நிலைத்திருந்தது. கடைசிவரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே இவர் காலம் தள்ளினார்.
விசுவாசம் என்பது நாகூர்க்காரர்களுக்கே உரித்தான உயர்ந்த குணம் போலும். எப்படி நாகூர் ஹனிபா இன்றுவரை திமுகவுக்கும், கலைஞருக்கும் அசைக்க முடியாத விசுவாசியாக இருக்கிறாரோ அதுபோல இறுதிமூச்சு வரைக்கும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர் ரவீந்தர்.

Subscribe to:
Posts (Atom)