தமிழில் : அ. கான் பாகவி
சுலைமான் அல்கானூனீ
———————————–
துருக்கி நாட்டின்
பத்தாவது மன்னர் சுலைமான் அல்கானூனீ. உஸ்மானியப் பேரரசர்களில் மிக
முக்கியமானவரான சுலைமான், தமது ஆட்சிக் காலத்தில் (கி.பி.1520-1566)
ஐரோப்பா, ஆசியா நாடுகள் மீது 13 முறை நேரடித் தாக்குதலை எதிர் கொண்டு
முறியடித்தவர்.
இவரது ஆட்சியில் தலைநகர் இஸ்தான்பூல்
ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வாசலுக்கு இமாமைத் தேர்ந்தெடுக்க நேர்காணல்
நடத்துவார்.போட்டி நடக்கும். போட்டியில் வென்று முதலாவதாக வருபவரே இமாமாகத்
தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த உயர்ந்த பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தகுதிகளை அவர் நிர்ணயித்திருந்தார். அத்தகுதிகள்
அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் தலைமைப் பண்புக்குச் சிறந்த
முன்னுதாரணமாகும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய பொற்காலம்.
தகுதிகள் என்ன?
1. அரபி, ஃபார்சி, லத்தீன், துருக்கி
ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். (பேசத் தெரிந்தால் மட்டும்
போதாது; மொழியாற்றல் வேண்டும்)
(இவற்றில் ஃபார்சீ, லத்தீன், துருக்கி ஆகியவை அந்நாட்டிற்கும் அக்காலத்திற்கும் அவசியமானவை).
2. திருக்குர்ஆன், தவ்ராத் (தோரா), இன்ஜீல் (பைபிள்) ஆகியவற்றைக் கற்றிருக்க வேண்டும்.
3. தற்காலப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
4. தற்காலப் போர்க்கலை அறிந்திருக்க வேண்டும்.
5. கணிதம் (விணீtலீs) இயற்பியல் (றிலீஹ்sவீநீs) ஆகிய கலைகளைப் பள்ளிவாசலில் கற்பிப்பதற்காக நன்கு கற்றிருக்க வேண்டும்.
6. நல்ல தோற்றமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
7. குரல் வளமிக்கவராக இருத்தல் வேண்டும்.
இமாம் என்பவர் தொழுகை எனும்
வழி பாட்டிற்கு வழிகாட்டியாக, தொழுகையாளிகளின் செயல்களுக்குப்
பொறுப்பாளியாகத் திகழ்கிறார். அதனால், தொழுகை தொடர்பான எல்லா விசயங்களும்
அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம்
என்பவர் சமுதாயத்தின் தகுதி வாய்ந்த முக்கியப் புள்ளி ஆவார். நாட்டிற்கும்
சமுதாயத்திற்குமான தோற்றத்தை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. எனவே,
அவரிடம் வேறுபல தகுதிகளும் இருப்பது அவசியம்.
இமாம்குர்ஆனை மட்டும் கற்றால் போதாது,
தவ்ராத், இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
இன்றும் புவியில் இருக்கும் இரு மதங்கள் அவை. நாம் வாழும் நாட்டிலேயே
அம்மதத்தார் வாழ்கின்றனர்.