பாலியல் விருப்பம் என்பது தண்ணீர் அருந்த அல்லது உணவு உண்பதற்கு
ஆசைப்படுவதுபோல் அல்ல. உடல் நெருக்கம் வெறுமனே உடலோடு இச்சைகாக இணைவதல்ல
.அது உறவை மேன்மை வேண்டி நிகழும் நிகழ்வு .தாம்பத்ய வாழ்க்கையில்
அனுபவிக்கக் கூடிய இனிய இன்பங்களுள் தலையானது பாலியல் (உடலுறவினால்)
அடையும் இனிய மகிழ்வு . இதுதான் கணவன் மனைவி இருவரையும் ஒருமனப்படுத்துவது,
பரவசப்படுத்துவது, ஒன்றுபட்டுவாழ வைப்பது. ஒருவருக்காக மற்றவர் தியாகம்
செய்யும் மனோவுறுதியைக் கொடுப்பது. இந்த சுகத்தை எதிர்நோக்கியே பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இஸ்லாமிய திருமண ஒப்பந்தம்
ஒரு வரையறைக்குள் உட்படுத்தப்பட்டது.ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள
கடமையை முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது . கணவன் மனைவி இருவருக்கும்
நிகழும் உடலுறவு உன்னதத் தன்மையுடையதாக உள்ளது . உறவினால் உண்டாகும்
குழந்தையை பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதால் அதில் வெறும் பாலியல் உறவாக
மட்டும் நினைத்துவிட முடியாது . பாலியல் உறவு உடற்சேர்கையாக மட்டும் கருதக்
கூ டாது அது அதற்கு மேல் பரம்பரை என்பதில் முக்கிய இடம்
வகிக்கின்றது. காமத்தினால் ஏற்படும் நிகழ்வல்ல .காதலினால் நிகழும்
கிளர்ச்சி அது பரம்பரையை வளர்க்கும் முயற்சி . உணர்ச்சி இருபாலருக்கும்
இருப்பது இயல்பு. உணர்ச்சி அற்ற வாழ்வு விரயம்.அதனால்தான் இறைவன்
இருபாலருக்கும் உணர்ச்சியை தூண்டும் சக்தியை நமக்குத் தந்து அதன்
வழியே குடும்பங்கள் செழிக்கவும், தம்பதிகள் மகிழ்வாக இருக்கவும், உடல்
ஆரோக்கியத்துடன் இருக்கவும், உலகம் தழைக்கவும் வைக்கின்றான்.
