பள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு செய்வோர் கவனத்திற்கு!
பொதுவாக மார்க்க சொற்பொழிவு செய்வோர் நல்ல மார்க்க அறிவு பெற்றவராகவே மற்றும் இறைபக்தியுடையவராக
இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. நான் கேட்டதும் அதனால் பெற்ற ஞானமும் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினால் கிடைத்த பெரும் பயன்தான். சம்சுல்ஹுதா ஹழ்ரத் அவர்கள் நீடுர் -நெய்வாசல் பெரிய பள்ளிவாசல் இமாமாக
இருந்து சிறந்த சேவைகள் செய்தார்கள். அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள்
அனைத்தும் மறக்க முடியாதாவைகளாக எக்காலத்திலும்
மனதில் நிலைத்து நிற்கக் கூடியதாக இருப்பதனை அனைவரும் அறிவார்கள். அவர்கள்போல் இன்னும் பல மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.