Showing posts with label ஈடில்லா பயணம். Show all posts
Showing posts with label ஈடில்லா பயணம். Show all posts

Wednesday, July 16, 2014

ஒரு வழிப்பயணம் !

கருவறை தொடங்கி
கல்லறை முடிய
மறுவழியில்லா
ஒரு வழிப்பயணம்

அகிலத்தின் பயணம்
மகிழத்தரும் பயணம்
அகமுணர்ந்து நடந்தால்
பயம்தரும் பயணம்

மனம்போன போக்கில்
தினமொரு பயணம்
மாறாக பயணிக்கும்
மறுமையின் பயணம்