எங்கு அழைத்தாலும் வருவார்கள் ஆனால் என்னோடு வா சுவனம் புகலாம் இந்த
மாயையான வாழ்கையை விட்டு நிலையான வாழ்வைத் தேடி சுவனம் போகலாம் என்று
அழைத்தாலும் வரமாட்டார்கள் . வரமுடியாமைக்கு ஒரு காரணம் சொல்லி
தப்பிக்கவும் செய்வார்கள்.தம்பி "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்"
விட்டு விடு என்னை.வீண் கற்பனையை .செய்யாதே என்பார்கள். பார்த்து வந்து
பார்த்துத காட்சிகளையும் அனுபவித்த மகிழ்வையும் நேரில் வந்து சொல்
அப்பொழுது அதனைப் பற்றி யோசிக்கின்றேன் என்பார்கள்.
"தாயின் மடியில் சுவனம் உள்ளது" என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம்
காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை.
மாறாக தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை சுவனம்
செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்குமோ! இதில் தாயின் கடமையும் உள்ளடக்கம்
. தாய் வர மறுப்பது,மகன் மீது எல்லை இல்லா அன்பு கொண்டாலும் அவன்
மாண்டால் தானும் அவனோடு சேர்ந்து உயிர் விட மறுப்பது தனக்கு உயிர் மேல்
உள்ள ஆசையல்ல மாறாக நீண்ட காலம் வாழ்ந்து இறைவனைத் தொழுது அவனது இறையருள்
அதிகமாகப் பெற வேண்டும் என்ற வேட்கையாகவே இருக்க முடியும். நாம் டார்வின்
கண்டுபிடிப்புபோல் குரங்கிலிருந்து வரவில்லையே .நம்மை இறைவன் இரத்தக்
கட்டியிலிருந்து படைத்தான்.
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து (மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்)
குரங்கு தன் குட்டி கிணற்றில் விழுந்து விட்டால் அதனை காப்பாற்ற தானும்
பாயும் நீர் அதன் காலளவு இருந்தால் குட்டியை இடுப்பில் தூக்கி வைத்துக்
கொள்ளும், நீர் ஊற மார்பளவு வந்தால் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும்
அதற்கு மேல் நீர் ஊருமானால் குட்டியை தூக்கிப் போட்டு விட்டு தான்
பாய்ந்து தப்பித்துக் கொள்ளும். நம் தாய் அந்நிலை வந்தால் தான் இறந்தாலும்
தன் குழந்தையை காப்பாற்றிவிடுவாள் . இதுதான் தாய்பாசம்.
Showing posts with label இறையருள். Show all posts
Showing posts with label இறையருள். Show all posts
Friday, April 27, 2012
Saturday, September 5, 2009
அன்னையின் மடல்
அன்னையின் மடல்
என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என
வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!
என் செல்லமே!உன் தாயின் முகத்தைப்பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில்தெரிவதைப் பார் மகனே!
மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?
என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!
parentswish.pps
View Download
என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே எனவருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!
என் செல்லமே!உன் தாயின் முகத்தைப்பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில்தெரிவதைப் பார் மகனே!
மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?
என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!
|
|
Mother.pps View Download |
Subscribe to:
Posts (Atom)