Showing posts with label இயந்திர வாழ்க்கை. Show all posts
Showing posts with label இயந்திர வாழ்க்கை. Show all posts

Monday, July 16, 2012

யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?


யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா?
ரயிலில் குளிர் சாதன பெட்டியில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது .என்னுடன் ஒரு நல்ல குடும்பமும் உடன் பிரயாணத்தில் .கணவன் மனைவி இருவரும் கணினி பொறியாளர்கள் .அவர்கள் இறை நேசமும் .மனித நேயமும் கொண்டவர்கள் .இருவரும் கணினி பொறியாளர்கள்
பகல் நேர உணவு நேரத்தில் நான் உணவு சாப்பிட அவர்கள் தங்கள் உணவையும் அன்பாக பகிர்ந்தார்கள்
அவர்கள் தங்களைப் பற்றி சொன்னார்கள்
இங்கு நிகழ்வில் நான் என்று குறிப்பிடுவது அந்த குடும்பத் தலைவர் பற்றித்தான்
-------------------------------------------------------
நானும்  எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் 'கிம்பளம்' வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு   கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் 'கிம்பளம்' வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை  வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற  நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக  வேண்டுமென்று இருவரும் யோசனையில்  ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க  வேண்டிய அவசியமானது.  அதனால் நான்  வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.