Showing posts with label ஆளுமை. Show all posts
Showing posts with label ஆளுமை. Show all posts
Monday, December 8, 2014
சல்மான் கான் - பிரம்மிக்க வைத்த ஆளுமை ! -Rafeeq
‘ஸ்டேடஸ்’ போட்டுவிட்டு சும்மா ஐந்து நாள்கள் காத்திருந்தேன்.
என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆவலில்! பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவே இல்லை!
ஆனாலும், உள்பெட்டியில் சரவெடிகள்!
ஒருவர் சொன்னார், “ உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல, ஆனாலும் தயங்கியே தான்ங்க லைக் போட்டேன்.”
இன்னொருவர் சொன்னார், “ என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே எழுதிக்கொண்டு இருந்தீர்கள்?”
மூன்றாமவர் சிவகாசி போல, “ ஏங்க அஞ்சு செ.மீ., டயலாக் பேச 50 டேக் வாங்குபவரெல்லாம் ஆளுமையா? பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம்?? ஏதாச்சும் உருப்படியா எழுதுங்க!!”
அதுமட்டுமன்றி, சாதாரணமாய் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும் நட்பு வட்டத்திலிருக்கும் சிலபல ஆசிரியப் பெருந்தகைகளெல்லாம் கூட ‘ஆப்ஸென்ட்’!
ஆக, ஒரு பெயரை மட்டும் வைத்து முடிவினை இறுதி செய்வதில் இன்னும் தீர்க்கமாய் இருக்கிறோம் என்பது மட்டும் உறுதியானது.
சரி, யார் இந்த சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமை? பார்க்கலாம
'அதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்!” என்று நம்ம ஊரு பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கடக்கும் நம்மிடம் வந்து, “ஏம்பா ’பில்கேட்ஸ்’ன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறாயா?” என்று யாராவது கேட்டால் எப்படி இருக்கும்??
Tuesday, February 25, 2014
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !
சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!
ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!
மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழித் தேயும்
Friday, November 9, 2012
ஆளுமை சக்தி அடைய மனிதன் படும் பாடு !
ஆளுமை சக்தி அடைய மனிதன் படும் பாடு !
ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர். சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும் சக்தி.அறிவின் அடித்தளம். இத்தனையும் சேர முயற்சி என்ற உந்தும் சக்தி தேவை.
ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும் நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை பாதி என்று எண்ணி தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது என்று நம்பி அதனை வெளிக்கொணர செயல்படுங்கள் .உங்களைவிட தாழ்ந்தவர் உங்களை ஆட்சி செய்வதனை பாருங்கள். அந்த ஆற்றலுடம் ஆளுமை சக்தி பெற்று ஆட்சிக்கு வந்த பின் நம்மை அவர்கள் ஆட்டி படைக்கும் வேதனையும் நாம் அனுபவிக்கவில்லையா ! அந்த ஆட்சி தொடர அவர்கள் ஈடுபடும் தவறான முறைகளில் மாட்டி அவதிப்படுவோர் பலர் .
சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை வைத்து இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவனிடம் இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி மடிந்தவர் பலர் .

Subscribe to:
Posts (Atom)