மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)
தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.
தலைமைப் பொறுப்பிலிருந்து செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டி திருக்குர்ஆன்,அடுத்து நபிமொழிகள் இறுதியாக இவைகளில் காணப்படாதவற்றில் சந்தேகம் வருமானால் மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவுப் பூர்வமாக முடிவுக்கு வர வேண்டும்.