[ 9 ] பயண அனுபவங்கள் – சீனா
ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie [ நன்றி வருகிறேன் ] எனச்சொல்லி மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்கொண்டு அடுத்த பூத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு எதிரே இன்ப அதிர்ச்சியாக எனது நிறுவனத்தின் உரிமையாளர் !
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளை முடித்துக்கொண்டு தான் வழக்கமாக தங்கி வரும் ஹோட்டலைப் பற்றிக் கூறினார். இங்கே ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். வணிகச் சந்தைகள் நடைபெறும் தினங்களில் குவாங்சோ நகரிலுள்ள தர சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து தங்குமிடங்களிலும் வாடகையை கணிசமாக உயர்த்திருப்பார்கள். உதாரணமாக சாதாரண நாட்களில் இரன்று மூன்று தர சான்றிதழ் பெற்றுள்ள தங்குமிடங்களில் நாள் ஒன்றுக்கு USD 100 என்றால் வணிகச் சந்தை நடைபெறக்கூடிய தினங்களில் USD 500 என நிர்ணயித்து இருப்பார்கள். எனது நிறுவனத்தால் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நான் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். காரணம் செலவீனங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கும். மேலும் சுயமாக சமைத்து உணவருந்துவதற்கும் ஏற்றதொரு இடமாக இருக்கும். ஏராளமான தொழிலதிபர்கள் தங்களின் தொழில் நிமித்தமாக வருகை தரும் போது அவர்கள் தங்கிச்செல்வதற்கு இது போன்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நிறுவனங்களின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பூத்துகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதால் தனித்தனியே கவனம் செலுத்துவது என்று முடிவு செய்து ஆளுக்கொரு பகுதிகளை பிரித்துக்கொண்டோம்.

