Showing posts with label அற்புதத்தினை அறிய. Show all posts
Showing posts with label அற்புதத்தினை அறிய. Show all posts

Friday, July 20, 2012

நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம் !

ரமலான் பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார்க்க பிறை தெரிந்தாலும் பிறை வடிவ புருவம் பிறைபோல் இருப்பதனைப் பார்க்க முகம் பார்க்கும் கண்ணாடி தேவைப்படுகின்றது. நம்மில் ஒளிந்திருக்கும் அற்புதத்தினை அறிய நாம் இறைவனை அறிய வழி பிறக்கும்.
அல்லாஹ்வை(இறைவனை) அறிய குர்ஆனை பொருள் அறிந்து ஓதுதல் உதவும். ஞானம் வர  வழி வகுக்கும்.
 நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம் இறைவனை அறிந்தும் அவன் மகிமையை புரிந்தும் அவனை தொழாமல் இருப்பது அறிந்தும் அறியா மூடர் அல்ல நாம் ,கற்றும் அறிவுக் கண் இழந்தவர் அல்ல நாம், நன்றி பாராட்டாதவர் நன்றி பாராட்டப்படுவதற்கு உரியவராக மாட்டார்