Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts
Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts

Thursday, April 26, 2012

"உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்" - அறிஞர் அண்ணா

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா


தமிழகத்தில் இஸ்லாம்
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

Thursday, September 15, 2011

தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்  அனைவரையும்  வியக்கவைக்கும் .
அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு இருந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் நான்  படித்துக் கொண்டிருந்த  போது நடந்த நிகழ்வு.

அன்றைய காலக்கட்டங்களில் கல்லூரிகளில் அரசியல் பேச அனுமதிக்கப்படுவதில்லை.

சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை மேடையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
எங்களுக்கும் அழைப்பு வந்திருந்தது, நாங்களும் சென்றோம்.
“எந்த தலைப்பில் பேச வேண்டும்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் வினவ,
அதற்கு மாணவர்கள், “தலைப்பு எதுவும் இல்லை. உங்கள் விருப்பமான தலைப்பில் நீங்கள் பேசலாம் என்றார்கள்.
மேடை ஏறிய அண்ணா அவர்கள்  தலைப்பு இல்லை என்பதால் "தலைப்பு இல்லை"  என்பதையே    தலைப்பாக வைத்து பேசுகிறேன்" என்று கூறி ஒரு அருமையான உரையை  நிகழ்த்தினார்கள்.
மாணவர்கள்களின் மகிழ்வும், கைதட்டலும் அரங்கு முழுதும்
எதிரொலித்தது.