Showing posts with label அய‌ல் நாட்டு. Show all posts
Showing posts with label அய‌ல் நாட்டு. Show all posts

Thursday, February 17, 2011

அய‌ல் நாட்டு ச‌ம்பாத்திய‌ம்....


அங்கோ அங்காடி ஊழிய‌ர்க‌ளின் அவ‌ல‌நிலை. இங்கோ அர‌புநாட்டில் ப‌ணிபுரியும் ஊழிய‌ர்க‌ளின் க‌வ‌லை நிலை.

பாசமிகு குடும்ப‌ப்பெரிய‌வ‌ர்க‌ளின் இற‌ப்பில் ப‌ங்கெடுக்க‌ முடிய‌வில்லை.

உற்றார், உற‌வின‌ர்க‌ளின் திரும‌ண‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ இய‌ல‌வில்லை. அத‌ற்கு கார‌ணம் ஒன்றும் புரிய‌வில்லை.

பாச‌த்துட‌ன் குடும்ப‌ச்சுமை என்னும் வேச‌த்தையும் ஒரு சேர‌ க‌ட்டி அனுப்ப‌ப்ப‌ட்ட‌ பொதிக‌ள் நாங்க‌ள்.

விடுமுறையில் மாத‌ங்க‌ள் வார‌ங்க‌ளாகும், வார‌ங்க‌ள் நாட்க‌ளாகும். நாட்க‌ளெல்லாம் ம‌ணித்துளிகளாகிப்போகும். விடுமுறை கழித்து இங்கு வந்த பின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.

வெயிலோ வ‌றுத்தெடுக்கும்; குளிரோ ந‌டுங்க‌ வைக்கும். பாலைவ‌ன‌ப்புய‌லோ க‌ண்ணில் ம‌ண்ணை வாரி தூவும்.

அர‌வ‌ணைக்க‌ இங்கு தாயுமில்லை, ம‌னைவியும் இல்லை. த‌லைய‌ணை உண்டு.

பால் இருக்கும் இங்கு ப‌ழ‌ம் இருக்கும். அதை வெட்டிக்கொடுக்க‌ ஆள் இருக்காது. ப‌ஞ்ச‌ணையில் குளிர் காற்றும் வ‌ரும், தூக்க‌மும் வ‌ரும். நம் ஏக்க‌ம் தீராது.

கடும்காய்ச்ச‌ல் வ‌ரும் த‌லைவ‌லி வ‌ந்து இடையிடையே த‌லையை தட்டும். ஆனால் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌ துண்டிப்பு நினைவில் வ‌ந்து சகல நோயுக்கும் இலவசமாய் சிகிச்சை அளித்துச் செல்லும்.

க‌ட‌ல் இருக்கும், க‌ரையுமிருக்கும். ஆனால் சுண்ட‌ல் விற்காது. சுற்றிப்பார்த்தாலும் உள்ளச்சுக‌ம் தீராது.

கார் இருக்கும் க‌ம்பெனியில் ந‌ல்ல பெய‌ர் இருக்கும் ஆனால் இவ‌ற்றின் சுவை காண‌ ந‌ம் ஊர் இருக்காது.

பெரும் த‌வ‌றேதும் செய்யாம‌ல் தம்மைத் தாமே நாடுக‌ட‌த்தினோம். அதிலே ஆன‌ந்தமும் க‌ண்டோம். சுத‌ந்திர‌மாய் தாய் நாட்டில் சுற்றித்திரிய‌ ம‌ற‌ந்து போனோம்.

இங்கு விளையாட‌ ப‌ர‌ந்த‌ திட‌ல்க‌ள் இருந்தும் விளையாட‌ ம‌ன‌ம் இல்லாம‌ல் போனோம். அறையிலேயே முட‌ங்கிப்போனோம். அதிலே போலி ஆனந்தம் க‌ண்டோம்.

இங்கு மிளிரும் விள‌க்கில் ம‌ய‌ங்கிப்போனோம். பிள்ளைப்பாச‌த்தை ப‌ர‌ணியில் க‌ட்டி வைத்தோம்.

க‌ணிப்பொறி முன் அம‌ர்ந்து கைத‌ட்டிச்சிரித்தோம். வார‌ விடுமுறையில் விழாக்கோல‌ம் க‌ண்டோம்.

குடும்ப‌த்துட‌ன் இருந்தாலும் குதூக‌ல‌த்தில் குறைக‌ள் க‌ண்டோம்.

இன்ஷா அல்லாஹ் தொட‌ரும்...

-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.
Source : http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_17.html
 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா … மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா ·